ஆச்சரியம்.. பால் வீதிக்கு வெளியே புதிய கிரகங்கள்.. ஆதாரத்துடன் கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானிகள்


பால் வீதிக்கு வெளியே ஆதாரத்துடன் புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு- 

வீடியோ வாஷிங்டன்: சூரிய குடும்பத்தின் பால்வீதிக்கு வெளியே முதல்முறையாக புதிய கிரகங்களை கண்டுபிடித்து அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர் நமது பால்வீதியில் புதிய கிரகங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே கண்டறிந்துள்ளனர். இந்நிலையில், முதன் முதலாக நமது சூரிய குடும்பத்தின் பால்வீதிக்கு வெளியே விண்வெளி மண்டலத்தில் புதிய கிரகங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஒகலாமா பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இந்த கிரகங்களை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். நாசாவில் உள்ள சந்தரா எஸ்ரே ஆய்வகத்தின் உதவியுடன் ஜின்யூ டாய், எடுவர்டு கெர்ராஸ் உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் இணைந்து புதிய கிரகங்கள் இருப்பதை ஆதாரப்பூர்வமாக கண்டறிந்துள்ளனர்.

நாசா ஆய்வு விண்வெளி ஆய்வில் மற்ற நாடுகளை விட அதிகளவில் முன்னேற்றமும் அதற்கான கட்டமைப்பு கொண்ட நாடு அமெரிக்கா. அங்குள்ள நாசாவில் பல கோடி மைல் அப்பால் இருக்கும் கிரகங்களையும் பால்வீதிகளை பார்க்கும் சக்தி வாய்ந்த டெலஸ்கோப்புகள் மற்றும் நவீன கருவிகள் உள்ளன

  பால்வீதிக்கு அப்பால் முதன் முதலாக நமது சூரிய குடும்பத்தின் பால்வீதிக்கு வெளியே விண்வெளி மண்டலத்தில் புதிய கிரகங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஒகலாமா பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இந்த கிரகங்களை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.


மைக்ரோலென்சிங் தொழில்நுட்பம் மைக்ரோலென்சிங் நுண் தொழில்நுட்பம் மூலம் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கிரகங்கள் 3.8 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


 தனித்துவமான கிரகங்கள் இந்த கிரகங்களுக்கு என்று தனியாக நிலா, வளிமண்டலம், புவிஈர்ப்பு விசை என்று தனித்தனியாக அமைந்துள்ளதாகவும், அவை நம் பூமியின் இயற்பியல் அடிப்படையுடன் ஒத்துப்போகவில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள் குழு, இந்த கண்டுபிடிப்பால் தாங்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதாகவும், பால்வெளி வீதிக்கு அப்பால் புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுதான் முதல் முறை என்றும் தெரிவித்துள்ளனர்.

அடுத்தக்கட்ட ஆய்வு

மைக்ரோலென்சிங் என்ற சக்திவாய்ந்த நுண் தொழில்நுட்பம் பற்றி அறிந்து கொள்வதற்கான சிறந்த உதாரணம் இந்த கண்டுபிடிப்பு என்று கூறும் ஆராய்ச்சியாளர்கள், இந்த கிரகங்களில் உயிரினங்கள் உள்ளனவா என்பது பற்றி ஆராய இன்னும் சக்திவாய்ந்த தொழில்நுட்பம் தேவை என்று தெரிவித்துள்ளனர். இந்த கிரகம் இருப்பதை மட்டுமே நம்மால் உறுதி செய்ய முடியும் என்றும் பல ஆயிரம் கோடி மைல்களுக்கு அப்பால் இந்த கிரகம் உள்ளதால் அவற்றின் தட்பவெட்பம் சூழ்நிலை குறித்து தெரியவில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Comments

Popular posts from this blog

WhatsApp Payments Feature, Based on UPI, Spotted on Android and iOS

Auto Expo 2018: UM Lohia Two Wheelers launchese-cruiser 'Renegade Thor'