Posts

Showing posts with the label ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க அணு குண்டு

ரஷ்யாவுக்கு எதிராக அணு குண்டு செய்யலாம்: அமெரிக்க ராணுவம் ஆலோசனை

Image
ரஷ்யா அணு ஆயுத்தங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க சிறிய அளவிலான அணுகுண்டுகளைத் தயாரிக்கலாம் என்று அமெரிக்க ராணுவம் அந்நாட்டு அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது மிகவும் மோதல் போக்கான நடவடிக்கை என்று கூறியுள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாரோவ், மிகுந்த ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். தற்போது அமெரிக்காவிடம் உள்ள அணு ஆயுதங்கள் அளவில் மிகவும் பெரியவை என்பதால் அவற்றைப் பயன்படுத்துவதை அமெரிக்கா தவிர்க்கும் என்று ரஷ்யா எண்ணக்கூடும் என்றும், அதனால் அமெரிக்காவின் வசம் உள்ள அணு ஆயுதங்கள் மூலம் ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்துவதைத் தடுக்க முடியாது என்றும் அமெரிக்க ராணுவம் கருதுகிறது. டிரம்பிடம் உண்மையாகவே அணு ஆயுத பொத்தான் உள்ளதா? பாகிஸ்தானின் விமானங்களை வீழ்த்திய பைலட் சகோதரர்கள் சிறிய அளவிலான ஆயுதங்கள் ரஷ்யாவை அச்சுறுத்தும் என்று அமெரிக்க ராணுவம் முன்மொழிந்துள்ளது. இந்த ஆலோசனை அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ள நியூக்கிளியர் போஸ்சர் ரெவ்யூ (Nuclear Posture Review) எனும் அணு ஆயுத நிலை மறு ஆய்வு குறித்த ஆவணத்தில் கூறப்...