ஓய்வுக்கு திட்டமிடும் போது கவனிக்க வேண்டிய ரிஸ்க்குகள்..!






நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை' என்ற பாடலை நாம் கேட்டு இருப்போம். இந்தப் பாடல் வரிகளைப் போன்று ஓய்வுக்குத் திட்டமிடும் போதும் நாம் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்று என்ற நிலை வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது.நாம் திட்டமிட்டபடி நடைபெறாமல் ஓய்வு பெறும் போது நிதி சிக்கல் ஏதும் நடைபெற்றால் என்ன செய்வது? எனவே ஓய்வுக்குத் திட்டமிடும் போது கவனிக்க வேண்டிய ரிஸ்க்குகள் குறித்து இங்குப் பார்ப்போம்.

நீண்டகால ஆபத்து ஓய்வுக்குத் திட்டமிட்டபடி இல்லாமல் நாம் எதிர்பார்த்ததை விட நீண்ட காலம் வாழும் போது நிதி சிக்கல் ஏற்படுவதே நீண்டகால ஆபத்து.

பணவீக்கம் ஓய்வு பெறும் போது விலை வாசி இவ்வளவு தான் இருக்கும் என்று கணக்கிடுவதும் தவறு. பணவீக்கம் என்பது நிலையானது இல்லை. ஒவ்வொரு நாளும் இது உயர்ந்துகொண்டே செல்ல அதிக வாய்ப்புள்ளது.

போதுமான திட்டமிடல் இல்லாதது ஓய்வு காலத்தில் மருத்துவச் செலவுகள் அதிகப்படியாக வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே அதற்கு ஏற்றவாறு திட்டமிடவில்லை என்றாலும் ரிஸ்க்குகள் அதிகமாக இருக்கும்.



ஆண்டு விகிதத்தில் வீழ்ச்சி ஆண்டுக்கு எவ்வளவு வட்டி விகித லாபம் வேண்டும் என்று திட்டமிடாமல் முதலீடு செய்துவிட்டு குறைவான ஓய்வூதிய கார்பஸ் பெறும் போது அதிக ரிஸ்க்குகளைச் சமாளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.

திட்டமிடப்படாமல் செலவு செய்தல் நீண்ட காலத்திற்கு என முதலீடு செய்துவிட்டு இடையில் தேவைப்படும் போது பணத்தினை எடுத்துச் செலவு செய்வது போன்றவற்றாலும் இலக்கை அடையாமல் ரிஸ்க் அதிகமாக வாய்ப்புகள் உள்ளது.

Comments

Popular posts from this blog

WhatsApp Payments Feature, Based on UPI, Spotted on Android and iOS

What Do Emotional Support Animals Do, Exactly?